ஜி.வி.பிரகாஷை ஒதுக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்..!


சமீபத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருந்தார்.. அந்த பேட்டியின் போது பல கேள்விகளை கேட்ட நிருபர், தற்போதுள்ள இளம் இசையமைப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர் யார் என கேட்க, சற்றும் யோசிக்காமல் சந்தோஷ் நாராயணன், அனிருத், ஜிப்ரான் என்கிற மூன்று பேரைத்தான் பதிலாக சொல்லியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..

அப்படியானால் அவரது அக்கா மகன் ஜி.வி.பிரகாஷை, 50 படங்களுக்கு இசையமைத்த அவரை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லையே ஏன் என்கிற ஐயம் உங்களுக்கும் எழத்தானே செய்யும்.. கேள்வி கேட்ட நிருபரும் ஒருவேளை ஜி.வி.பிரகாஷ் பெயரை ஏ.ஆர்.ரஹ்மான் சொல்வாரோ என இடைவெளி கொடுத்து பார்த்தார்.. ஆனால் ரஹ்மானோ அடுத்த கேள்வி என்ன என்பது போல பார்த்தாராம்.

ஜி.வி.பிரகாஷை ரஹ்மான் ஒதுக்கிவைக்க காரணம் அவரது சமீபகால செயல்பாடுகள் தானா, இல்லை அவரை இளம் இசையமைப்பாளர் என ரஹ்மான் நினைக்கவில்லையா..? அவருக்கு மட்டுமே தெரியும்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *