சிம்பு படத்தை மூன்றேகால் மணி நேரம் இரண்டு இடைவேளையுடன் பார்க்கமுடியுமா..?


ரஜினி படம் மூன்றுமணி நேரம் பார்க்கவேண்டுமேன்றாலே ரசிகர்கள் ஆவ்’ என் அகோட்டாவி விட்டு சலிப்பு கொட்டுகிறார்கள். ‘படையப்பா’ படம் வெளியான காலத்தில் அப்படிப்பட்ட உறுதிமிக்க ரசிகர்கள் இருந்தார்கள்.. படம் மூன்று மணி நேரம் என்பதால் இரண்டுமுறை இடைவேளை விடலாமா என தமிழ்சினிமா வரலாற்றில் முதல்முறையாக யோசிக்கப்பட்டது..

ஆனால் ரசிகர்கள் பொறுமை இழந்து விடுவார்கள்.. கேண்டீன் வியாபாரத்திற்காக இப்படி பண்ணுகிறார்கள் என நினைத்து ஒரே இடைவேளையுடன் படத்தி ரிலீஸ் செய்தார்கள்.. ரஜினி படம் என்பதாலும் விறுவிறுப்பாக இருந்ததாலும் பார்க்க முடிந்தது..

ஆனால் சிம்பு எந்த தைரியத்தில் தனது படத்தை மூன்றே கால் மணி நேரம் ஓடும் படமாக எடுக்கலாம் என்றும், இரண்டு இடைவேளைகள் விடலாம் என்றும் கொஞ்சம்கூட சிரிக்காமல் சொன்னார் என்றுதான் தெரியவில்லை. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்கிற படம் மூன்றுவிதமான காலகட்டத்தில் நடக்கும் கதையாம்.

அதை அப்படியே சிம்புவிடம் சொன்ன ஆதிக், தான் சொன்ன கதையில் சில காட்சிகளை தூக்கிவிடலாம் என்றாராம். காரணம் அப்படியே எல்லாவற்றையும் எடுத்தால் மொத்தப்படமும் கிட்டத்தட்ட மூன்றேகால் மணி நேரம் ஓடுமாம். ஆனால் அதற்கு சிம்புவோ, பரவாயில்லை அப்படியே எடுக்கலாம் என்றும், இரண்டு இடைவேளைகள் விடலாம் என்றும் சொன்னாராம். சிம்புவின் படம் வெளிவருவதே மிகப்பெரிய போராட்டங்களை சந்திக்கவேண்டிய சூழலில் இதெல்லாம் ஆகிற விஷயமா. என உதவி இயக்குனர்கள் புலம்புகிறார்கள்..?