ஸ்ருதிஹாசன் பாணியில் ஜூட் விட்ட காஜல் அகர்வால்..!


ரொம்பநாளைக்கு அப்புறமா ஒரு பெட்ரோமாக்ஸ் லைட் வாடகைக்கு போகுதுன்னு வைங்க.. அந்தநேரம் பார்த்து கல்யாண வீட்டுக்காரங்களும் கேட்குறாங்க.. காதுகுத்து வீட்டுக்காரனும் கேட்குறான்.. ரெண்டுமே நல்ல விஷேசம் தான் என்றாலும் கல்யாண வீட்டு விசேஷம் தானே பெருசு.. அதற்குத்தானே தந்துவிடுவார்கள். அப்படி ஒரு பெட்ரோமாக்ஸ் லைட் மாதிரித்தான் காஜல் அகர்வாலும் இப்போது மாறிவிட்டார்..!

தற்போது ‘இருமுகன்’ படத்தில் நடித்துவரும் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் திரு இயக்கத்தில் ‘கருடா’ என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார்.. இந்தப்படத்தின் கதாநாயகியாக காஜல் அகர்வாலைத்தான் ஒப்பந்தம் செய்து வைத்திருந்தார்கள். படப்பிடிப்பு தொடங்க இன்னும் நாட்கள் இருக்கின்றன.. இந்த நேரத்தில்தான் அஜித் நடிக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு காஜல் வீட்டு கதவை தட்டியிருக்கிறது.

பிறகென்ன பெட்ரோமாக்ஸ் லைட் கதைதான். தானே கூடிய சீக்கிரம் ரிட்டையர்டு ஆகப்போகிறோம்.. இதற்குள் விக்ரம் படம் முக்கியமா, அஜித் படம் முக்கியமா என நினைத்த காஜல், அஜித் படத்திற்கு தாவியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.. ஏனென்றால் அதுதானே வாழ்நாள் சாதனை பட்டியலில் சேரும்.

இப்படித்தானே ‘வேதாளம்’ படத்தில் கிடைத்த டம்மி ரோலுக்காக, ஏற்கனவே ‘தோழா’ படத்தில் ஒப்பந்தமான ஸ்ருதிஹாசன் சொல்லாமல் கொள்ளாமல் அந்தப்படத்தில் இருந்து ஜம்ப் ஆனார்.. பின் ‘தோழா’வின் வெற்றி பார்த்து ‘வட போச்சே’ என கண்ணை கசக்கியது வேறு கதை.. அதேபோல காஜல் பஞ்சாயத்தை சந்திப்பாரா..? கண்ணை கசக்குவாரா..? காலம் பதில் சொல்லும்.