“ராதிகா பெயரை டைட்டில் கார்டில் போடாமல் அவமானப்படுத்தி விட்டார்கள்” ; சரத்குமார் கொந்தளிப்பு..!


சில தினங்களுக்கு முன் தர்மதுரை படத்தை பார்த்தார் சரத்குமார்.. விஜய்சேதுபதி, தமன்னா ஆகியோர் நடித்திருந்த அந்தப்படத்தில் சரத்குமாரின் மனைவி ராதிகா, முக்கியமான கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்மணியாக நடித்திருந்தார். படம் பார்க்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே மூட் அவுட் ஆனார் சரத்குமார்.. காரணம் ராதிகாவின் பெயர் டைட்டில் கார்டில் இடம்பெறாதது தான்.

கடைசியில் என்ட் கார்டு போடும்போது, பத்தோடு பதினொன்றாக நடிகர் ராஜேஷின் பெயர் அருகில் ராதிகாவின் பெயரும் போடப்பட்டிருந்தது. ஒரு சீனியர் நடிகையான ராதிகாவுக்கு டைட்டில் கார்டில் பெயர் போடாமல் அவமானப்படுத்திவிட்டார்கள் என படம் பார்க்கும்போதே காட்டமாக ஒரு ட்வீட் தட்டிவிட்டார் சரத்குமார். அதேசமயம் படத்தையும் மற்ற நடிகர்களையும் பாராட்டவும் தவறவில்லை.

ஆனால் சரத்குமாரின் கோபம் பற்றி அறிந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி, தான் ராதிகா மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகவும், அவர் பெயரை டைட்டில் கார்டில் போடாமல் விட்டது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளார்.