ஒருவருடமாக பிரிந்து வாழ்வதை ஒப்புக்கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்..!


கடந்த சில நாட்களாகவே மீடியாவில் ஒரு புகைச்சல் உருவாகி இருந்தது.. அதாவது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும், அவரது கணவர் அஸ்வினும் விவாகரத்து பெற போகிறார்கள் என்பதுதான். அமலாபால்-ஏ.எல்.விஜய் விவாகரத்து செய்தி தற்போதுதான் ஓய்ந்துள்ள நிலையில் இது என்ன புதுசா, அதுவும் ரஜினியின் மகளுக்கு என்கிற சங்கடமும் ஏற்படவே செய்தது.. ஒருவேளை வதந்தியாக கூட இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.

ஆனாலும் இதுபற்றிய உறுதியான செய்திகள் எதுவும் வெளியாகமால் இருந்து வந்தன. இன்னொரு பக்கம் சௌந்தர்யாவுக்கு விலங்குகள் நல தூதராக பதவி கொடுக்கப்பட்டது வேறு இந்த செய்தியுடன் இணைத்தே பேசப்பட்டது. இதுதான் சரியான தருணம் என நினைத்தாரோ என்னவோ, “ஆமாம். நாங்கள் ஒரு வருடமாகவே பிரிந்து வாழ்கிறோம்.. விவகாரத்திற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது” என கூறி இதுநாள் வரை வதந்தியாக பரவிய தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் சௌந்தர்யா.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *