விஜய்சேதுபதியின் மீது ‘அம்மணி’யின் கோபத்துக்கு காரணம் இததான்..!


காங்கிரஸ் மேடையில் யாராவது கம்யூனிசம் பேசுவார்களா.? அதுபோலத்தான் பேசியுள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். சில நாட்களுக்கு முன் டிவி சேனல் ஒன்றி சமீபத்தில் நடந்த பெண் படுகொலை சம்பந்தமான விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் லட்சுமி ராமகிருஷ்ணன்.. திடீரென சம்பந்தா சம்பந்தமில்லாமல் இறைவி படத்தையும் அதில் நடித்த விஜய்சேதுபதி பற்றியும் கொஞ்சம் காட்டமாகவே பேசத்தொடங்கினார்..

திடீரென அவர் ஏன் இப்டி ட்ராக் மாறி பேசவேண்டும் என விசாரித்தால் விஜய்சேதுபதி மீது பெர்சனாலாகவே கோபத்தில் இருக்கிறாராம் இந்த அம்மணி.. காரணம் தான் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய்சேதுபதியிடம் கால்ஷீட் கேட்க எவ்வளவோ முயற்சி செய்தாராம்.

ஆனால் அவரை பார்க்க கூட அவரது பாதுகாப்பு வளையத்தினர் அனுமதிகவில்லையாம். ஏற்கனவே அவர் இயக்கிய ‘அம்மணி’ படம் வேறு பிசினஸ் ஆகாமல் பெட்டிக்குள் இருக்க, இந்த லட்சணத்துல இன்னொரு படம் இயக்குகிறாரா இவர் என கோடம்பாக்கத்தில் கேலி பேசி வருகிறார்கள் சிலர்.