நடிகர் சங்கத்துக்கும் அஜித்-விஜய்க்கும் சம்பந்தம் இருக்கா..? இல்லையா..?


நடிகர் சங்கம் சார்பாக மலேசியாவில் இரண்டு நாட்கள் நட்சத்திரக் கலைவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக சூப்பர்ஸ்டார் ரஜினி உள்ளிட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் மலேசியாவிற்கு ஒரே விமானத்தில் பயணமாகி உள்ளனர்.

நடிகர் கமல்ஹாசனும் அந்த நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்ள உள்ளார் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். அதே சமயம், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருக்கு அடுத்து தமிழ்த் திரையுலகத்தில் மிகப் பெரும் நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், இந்த கலை விழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்கள் என சொல்லப்படுகிறது.

அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை என்பதை லட்சியமாகவே வைத்திருக்கிறார். அது குறித்து பல முறை சர்ச்சைகள் எழுந்துள்ளன. இப்போது அவரைப் போலவே விஜய்யும் நடந்து கொள்ள முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள்.

அஜித் வராத போது தான் மட்டும் ஏன் வர வேண்டும் என அவரும் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்க முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள். சிம்பு உள்ளிட்ட சிலரும் இந்த நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது

இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகை நடிகர் சங்க கட்டிடம் கட்ட பயன்படுத்த உள்ளனர். அதற்காகவே ரஜினி கூட தனது பங்களிப்பும் இதில் இருக்கவேண்டும் என்பதற்காகவும் அதிக நிதி திரட்டுவதற்காகவும் தனது அரசியல் வேலைகளை கூட ஒதுக்கிவிட்டு மலேசியா சென்றுள்ளார்.

ஆனால் தாங்கள் சூப்பர்ஸ்டார்களாக ஆகிவிட்டோம் என தாங்களாகவே நினைத்துக்கொள்ளும் இந்த இரண்டு நடிகர்களுக்கும் நடிகர் சங்கத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை.. நடிகர் சங்கம் தான் இதை தெளிவுபடுத்த வேண்டும்.

அஜித், விஜய், ரஜினி, மலேசிய நட்சத்திர விழா, தென்னிந்திய நடிகர் சங்கம், கமல்

Have Ajith and Vijay connect with Nadigar Sangam..?

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *