இரைப்பை மற்றும் உணவு குழாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்!

இரைப்பை மற்றும் உணவு குழாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னையில் நடக்கிறது.

புற்றுநோய் என்பது வெவ்வேறான பலபிரிவுகளை கொண்ட நோயாகும். உலகில் கண்டறியப்ட்டுள்ள 5 வகை புற்றுநோயில், இரைப்பை மற்றும் உணவு குழாய் புற்றுநோய் மிகவும் ஆபத்தானதாகும்.

இந்த வகை புற்றுநோய், ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி வருகிறது. எனினும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இந்த நாட்டு மக்களிடம் காணப்படுவதில்லை. பன்முகதன்மை கொண்ட நம் நாட்டில் பல்வேறு கலாச்சாரம் மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் காணப்படுகிறது.

நம் நாட்டை பொறுத்தமட்டில் இரைப்பை மற்றும் உணவு குழாய் புற்றுநோய் பாதிப்பில் மிசோரம் முதலிடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் குஜராத் மாநிலமும், மத்தியில் தமிழகமும் உள்ளது.

உணவு குழாய் மற்றும் இரைப்பை புற்றுநோய் ஏற்பட பிரதான காரணியாக வாழ்க்கை முறையும், அவர்களின் உணவு பழக்க வழங்கங்களும் இருப்பது ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ‘எஸோஇந்தியா’ நிறுவனம் 4 வகை மாரத்தான் விழிப்புணர்வு ஓட்ட பந்தயத்தை சென்னையில் நாளை (26&ந் தேதி) நடத்த இருக்கிறது. அரை மாரத்தான், மினி மாரத்தான், கார்ப்பரேட் ஓட்டம் மற்றும் புற்றுநோயில் இருந்து பிழைத்தவர்கள் ஓட்டம் என 4 வகையாக இது நடக்கிறது.

இந்த நிகழ்ச்சி குறித்து டாக்டர். சந்திரமோகன் மற்றும் டாக்டர். கனகவேல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:&
புற்றுநோய்களில் இரைப்பை மற்றும் உணவு குழாய் புற்றுநோய் மிகவும் ஆபத்தானது. இந்த வகை புற்று நோய் பெரும்பாலும் உணவு பழக்கவழக்கத்தால் வருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்பட்டத்தவே இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர், 3 மணி நேரம் இரைப்பை மற்றும் உணவு குழாய் புற்றுநோய் குறித்து டாக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *