மேஜர் முகுந்த் குடும்பத்தை கவுரவித்த ஆக்க்ஷன் கிங் அர்ஜுன்

ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் தயாரித்து இயக்கும் ஜெய்கிந்த் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக ராணுவத்தில் பணியாற்றி மறைந்த ராணுவவீரர் முகுந்த் குடுமபத்தை அழைத்து கவுரவித்தார் ..

முன்னதாக பேசிய அர்ஜுன் நான் சிறுவயதிலேயே ராணுவத்தில் சேருவதற்கு ஆசைப்பட்டேன் அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டேன் , எனது அம்மாவிடமும் அப்பாவிடமும் அனுமதி கேட்டுபோகும் சமயத்தில் எனது தாயர் அதற்க்கு அனுமதி அளிக்கவில்லை இல்லையென்றால் இந்நேரம் நான் ஒரு ராணுவ வீரராக இருந்திருப்பேன் .

அதனால்தான் எனது படங்களில் ராணுவ வீரராக நடிக்கும் பொழுது ஒரு உற்சாகம் எனக்குள் வந்து விடுகிறது , இந்த படம் கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும் ஒரு படமாக இருக்கும் . ஜெய்கிந்த்1 படத்தில் சொல்ல தவறிய பல விசயங்கள் இந்த படத்தில் இருக்கும் ,, ஒரு ரியல் ஹீரோவை கவுரவப்படுத்தும் நோக்கில்தான் மேஜர் முகுந்த் குடும்பத்தினரை இந்த விழாவுக்கு அழைத்திருந்தோம் ..என்று கூறினார் .

விழாவுக்கு இயக்குனர் பாலா , கலைப்புலி தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .