முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால் நடிக்கும் ‘உன்னால் என்னால்’!

ஸ்ரீ ஸ்ரீ கணேஷ் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் “ உன்னால் என்னால் “
இந்த படத்தில் A.R.ஜெயகிருஷ்ணா, ஜெகா, உமேஷ் ஆகிய மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ராமசந்திரன், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – கிச்சாஸ் / இசை – முகமது ரிஸ்வான்
பாடல்கள் – தமிழமுதன், கருணாகரன், பொன்சீமான்.
எடிட்டிங் – M.R.ரெஜிஷ் / கலை – விஜய்ராஜன்
நடனம் – கௌசல்யா / ஸ்டன்ட் – பில்லா ஜெகன்.
தயாரிப்பு நிர்வாகம் – மணிகண்டன்.
தயாரிப்பு – ராஜேந்திரன் சுப்பையா.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – A.R.ஜெயகிருஷ்ணா.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..

கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வரும் மூன்று இளைஞர்கள் எ.ஆர்.ஜெயகிருஷ்ணா ( ராஜ்), ஜெகா (ஜீவன்), உமேஷ் (கணேஷ் ). பொருளாதார தேவைகளை நோக்கி பயணிக்கும்போது ஏற்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலையில் பணத்துக்காக எதையும் செய்யும் கும்பலிடம் சேர்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த கும்பலின் சுயரூபம் தெரிந்து இளைஞர்கள் இறுதியில் பணத் தேவைக்காக பணிந்தார்களா? இல்லை சதிவலையை உடைத்து மனசாட்சிக்கும், மனித நேயத்திற்கும் மகுடம் சூடினார்களா என்பதுதான் படத்தின் திரைக்கதை. வேகமும் விவேகமும் கலந்த, சுவாரஸ்யங்களுடன், அடுத்தடுத்து யூகிக்க முடியாத திரைக்கதையாக இருக்கும் விதத்தில் உருவாக்கி கதையின் நாயகனாக களமிறங்குகிறேன் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றார் இயக்குனர் A.R.ஜெயகிருஷ்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *