அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா|கணேஷ் பிரசாத்,பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஜான் விஜய்,மனோபாலா மற்றும் சுப்பு அருணாசலம்

கணேஷ் பிரசாத்,பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஜான் விஜய்,மனோபாலா மற்றும் சுப்பு அருணாசலம் நடிக்கும் “அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா”

பிரபலமான வசனங்கள் படங்களின் தலைப்பாவது தற்போதைய தமிழ் சினிமாவின் நவீன நாகரீகம் எனலாம். அப்படி பேசப்பட்ட ஒற்றை வரி வசனங்களில் பிரபலமானது என்ன வென்று யாரை கேட்டாலும் ‘சூரியன்’ படத்தில் கவுண்டமணி பேசும் ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா’ என்ற வசனத்தை குறிப்பிடுவார்கள்.
‘ உன்னிப்பாக கவனித்தால் தற்போதைய அரசியல் நகைப்புக்குரியது தான். சராசரியான குடிமகனாக நாம் , நமக்கே உரிய நகைசுவை உணர்வோடு அந்த அரசியலை ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா’ சகித்துக் கொள்ள கற்றுக் கொண்டோம். தற்காப்பு, கரையோரம், படங்களில் நாயகனாக அறிமுகமாகும் கணேஷ் பிரசாத் இந்த படத்திலும் நாயகனாக நடிக்க அவருடன் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஜான் விஜய்,மனோபாலா, சுப்பு அருணாசலம், என்ற ஒரு மாபெரும் நகைசுவை படை நடிக்க உள்ளது. வெறுமனே சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும்வைக்கும் இருக்கும் ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா’. கொடைக்கானலில்11 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த படம் உண்மையை நகைசுவையுடன் உரக்க சொல்லும் படமாகும்’ என்கிறார் பல்வேறு வெற்றி படங்களுக்கு கதை அமைப்பாளராக பணியாற்றிய இயக்குனர் சக்தி அஜய் குமார்.