சன் மியூசிக்கில் இருந்து அஞ்சனா விலகல் ; ரசிகர்கள் அதிர்ச்சி..!


கடந்த 10 ஆண்டுகளாக சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்களை மகிழ்வித்தவர் (!?) அஞ்சனா. இவர் தற்போது அந்தச் சேனலில் இருந்து விடைபெறுவதாக தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,’ ‘சொந்த காரணங்களுக்காக சன் மியூசிக்கில் இருந்து விடைபெறுகிறேன். கடந்த 10 ஆண்டில் ஏற்றம், இறக்கம் என பல அனுபவங்களை கற்றுக்கொண்டேன். என் மீது அன்புகொண்ட எல்லோருக்கும் கடன்பட்டிருக்கிறேன். எனது ரசிகர்களுக்கு நன்றி.’ என குறிப்பிட்டுள்ளார்

அஞ்சனாவின் இந்த அறிவிப்பால் டிவி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், சினிமா விழாக்களில், பொது விழாக்களில் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவேன் என கூறியுள்ளது சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மேடை தவறாமல் தனது ரம்பம் போன்ற வழ வழ பேச்சால் அறுவை போடும் அஞ்சனாவை நாங்கள மட்டும் இன்னும் சகித்துக்கொள வேண்டுமா என் சோஷியல் மீடியாவில் தங்களது வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.