சொன்ன தேதியில் (ஜூலை-12) தமிழ்ப்படம்-2 ரிலீஸாகுமா ..?


கடந்த சில மாதங்களாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பட வெளியீட்டு குழு என்ற ஒன்று அமைக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதல் படி படங்கள் ரிலீஸாகி வருகின்றன. இடையில் பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட ஒன்றிரண்டு படங்கள் மட்டும் தாங்களாகவே ஒரு தேதியை அறிவித்துக்கொண்டு அடம்பிடித்து ரிலீஸாகின. தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் கூட பட வெளியீட்டு குழுவின் ஒப்புதல் பெற்ற பிறகே தனது படத்தை ரிலீஸ் செய்தார்.

இப்போது லேட்டஸ்ட் தகவலாக தமிழ்படம் 2-வருகிற 12ம் தேதி படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்படம் 2-வை பொறுத்தமட்டில் கவுன்சிலில் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லையாம். இருப்பினும் அதை மீறி பட ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்கள். இதனால் கவுன்சிலில் இதுதொடர்பாக பஞ்சாயத்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படம் சொன்ன தேதியில் ரிலீஸாகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்படம் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தமிழ்படம் 2 என்ற பெயரில் உருவாகி உள்ளது. சிவா – சிஎஸ் அமுதன் கூட்டணியே தொடர்கிறது. ஒய் நாட் ஸ்டுடியோ சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ளார். முதல்பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் தமிழ் சினிமாவையும், நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் சென்சாரில் யு சான்று பெற்றுள்ளது.