யூடியூப்பில் சாதனை படைத்த ரவுடி பேபி பாடல் !


தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் வெளியான மாரி2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் 700மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்து வருகிறது.
தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று சாதனை படைத்தது. இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

தற்போது 700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ‘யூடியூப்’பில் ரவுடி பேபி பாடல் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்திய அளவில் குறுகிய காலத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ பாடல் என்ற சாதனையையும் ரவுடி பேபி பாடல் பெற்றுள்ளது. இப்பாடல் 318 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *