லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கல்தா கொடுத்தது டிவி சேனல்..!


சொல்வதெல்லாம் உண்மை’ என்கிற நிகழ்ச்சியே அதை திறம்பட நடத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணனால் தான் பிரபலமானது என்பது உண்மை.. தவிர அந்த நிகழ்ச்சியின் மூலம் லட்சுமி ராமகிருஷ்ணனும் இன்னும் பிரபலமானார் என்பதும் உண்மை.. ஆனால் அந்த நிகழ்ச்சியை கிண்டலடித்தும், அதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும் சில வசனங்களை கிண்டலடித்தும் இப்போதுவரை சோஷியல் மீடியாவில் மீம்ஸ்கள் பறக்கின்றன.

இந்தநிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக 1500வது எபிசோடில் இது நடந்துள்ளது. அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் சரியாக தெரியாத நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் கோபத்துடன் வெளியேறும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை இரண்டு தரப்பினர் பங்கேற்கும்போது, இருவரின் அந்தரங்க உண்மைகள் அம்பலமாவது என்பது எழுதப்படாத உண்மை.. தவிர இதுபற்றி கவலைப்படாதவர்கள் தான் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்கள் என்றும் சொல்லலாம். ஆனாலும் நீதிபதி (!?) லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும் தீர்ப்பு யாரோ ஒருவருக்குத்தான் சாதகமாக இருக்கிறதே, தவிர மற்றவருக்கு பாதகமாகத்தான் அமைகிறது. இதனால் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை பூதாகரமாக கிளம்பியதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *