அனேகன் டிரைலர் விரைவில்!!!

தனுஷ் நடித்த “அனேகன் ” படத்தின் பாடல் மற்றும் டீசர், படத்தின் வெற்றியை தீர்மானித்துவிட்ட நிலையில், இந்த படத்தின் டிரைலர் நாளை இரவு 7 மணிக்கு இணையதளங்களில் வெளியாகும் என K.V.ஆனந்த் டீம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து, தனுஷ், அம்ரியா தஸ்தூர், கார்த்திக், ஆஷிஷ் வித்யார்த்தி, அதுல் குல்கர்னி, தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மாற்றான் படத்திற்கு பின்னர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பேய் விழித்திருக்கும் நேரத்தில் இல்லாமல், மனிதர்கள் விழித்திருக்கும் நேரத்தில் டிரைலரை ரிலீஸ் செய்தல் நன்றாகத்தான் இருக்கிறது.