அனைத்து சாதனைகளையும் தகர்த்தெறியும் ரஜினியின் ‘2.O’..!


இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவான ‘2.O’ படம் மாறியுள்ளது. அனைவரும் வியக்கும் அளவிற்கு 2.0 படம் வரும் நவ-29ல் உலக அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

பொதுவாக பெரிய படங்கள் ஏதாவது பண்டிகை நாட்களில்தான் வெளிவரும். ஆனால், இந்தப் படத்தை ஒரு சாதாரண நாளில் வெளியிடுகிறார்கள். இதுவரை இந்திய சினிமாவில் பாகுபலி-2 படம்தான் அதிக தியேட்டர்களிலும், அதிக காட்சிகளிலும் திரையிடப்பட்ட படமாக இருந்தது. அந்தப் படம் 6500 தியேட்டர்கள், 31,000 காட்சிகளாக திரையிடப்பட்டது.

அந்த சாதனையை 2.O படம் முறியடிக்கும் என்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 6800 தியேட்டர்கள், 33,000 காட்சிகளாக 2.0 படம் திரையிடப்பட உள்ளதாம். வெளிநாடுகளில் மேலும் 4,000 தியேட்டர்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், முதல் நாள் வசூலில் பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்து 2.0 படம் பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தும் என கூறப்படுகிறது.

.