நஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..?


நடித்தது சில படங்கள் தான் என்றாலும் குறுகிய காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை நஸ்ரியா. நாலு வருடங்களுக்கு முன் அழகுப்புயலாக வலம்வந்த நஸ்ரியா, நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டபின், இனி எங்கே சினிமாவில் நடிக்கப்போகிறோம் என நினைத்தாரோ என்னவோ உடம்பை கொஞ்சம் குண்டடிக்க விட்டுவிட்டார்.

பெரும்பாலும் நடிகைகளில் பலர், சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டால் தங்களது அழகு, உடற்கட்டு விஷயங்களில் அவ்வளவாக கவனம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.. நஸ்ரியாவும் இந்தப்பட்டியலில் ஒருவராகவே இடம்பிடித்தார்.

அவரை மீண்டும் தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க நினைத்த ‘பெங்களூர் டேய்ஸ் பட இயக்குனர் அஞ்சலி மேனன் நஸ்ரியாவை நீண்ட நாள் கழித்து சந்தித்தபோது, “என்னம்மா இப்படி குண்டுமணி மாதிரி ஆகிட்டே” என அதிர்சசியானாராம்.

அதன்பின் தனது படத்தில் நடிக்க நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்த அவர், படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் சில பயிற்சிகள் தந்து, நஸ்ரியாவை ஓரளவு ஸ்லிம் ஆக்கி நடிக்கவைத்துள்ளாராம். தற்போது அஞ்சலி மேனன் டைரக்சனில் பிருத்விராஜின் தங்கையாக ‘கூடே’ என்கிற படத்தில் நடித்து முடித்துவிட்டார் நஸ்ரியா.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *