ஜெய் சுட்ட தோசையால் வெளிச்சத்துக்கு வந்த லிவிங் டுகெதர் விவகாரம்..!


‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற ஜோடியாக பேசப்பட்டவர்கள் தான் ஜெய்யும் அஞ்சலியும்.. ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை, அதற்கடுத்து வெளியான காதல் கிசுகிசுக்களால் இவர்கள் இருவரும் தொடர்ந்து இணைந்து நடிக்காமல் விலகிக்கொண்டார்கள்.

ஆனால் இன்றுவரை அந்த கிசுகிசுக்கள் ஓய்ந்தபாடில்லை. ஜெயிடம் அதை பற்றி கேட்டால் நோ கமெண்ட்ஸ் என்பார்.. அதன்பின்னர் வந்த நாட்களில் இதுபற்றி இரண்டு தரப்பினரும் எதுவும் வாய்திறக்காமல் இருந்து வந்தனர்.. அஞ்சலியும் ஆந்திராவில் உள்ள தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து செட்டிலாக போகிறார் என்றெல்லாம் கூட சொல்லப்பட்டது..

ஆனால் சில தினங்களுக்கு முன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக ஜெய் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் ஒரு வீட்டின் சமயலறையில் அஞ்சலிக்கு ஜெய் தோசை ஊற்றி கொடுக்கும் காட்சியை பார்த்ததும், ஆஹா இவர்கள் லிவிங் டுகெதராக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிரார்களா.. இது தெரியாமல் போச்சே என ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.

தன் மனைவி ஜோதிகா நடிக்கும் மகளிர் மட்டும் பட புரமோஷனில் குதித்திருக்கிறார் சூர்யா. இதற்காக மனைவிக்கு தோசை சுட்டு தரும்போட்டி அறிவித்ததுடன் வீட்டில் ஜோதிகாவுக்கு சுடச்சுட தோசை சுட்டு பரிமாறி அதற்கான புகைப்படத்தை வெளியிட்டார். அதை தொடர்ந்தே அவரைப்போன்று இந்த புகைப்படத்தை ஜெய் பதிவிட்டுள்ளதால், இந்த ஜோடி விரைவில் கல்யாண மேடை ஏறப்போவது உறுதி என்பது தெரிகிறது.

இதுபற்றி அஞ்சலி குறிப்பிட்டிருந்த விஷயம் தான் ஹைலைட்.. “’ம்ம்ம்… சுவையான தோசை ஜெ(ஜெய்). என் மனதுக்கு பிடித்தவர் சமைப்பதை பார்த்தபோது அருமையாக உணர்ந்தேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

சூர்யா தோசை சுட்டார் என ஆரம்பத்தில் உடனே போட்டிக்கு ஜெய்யும் தோசை சுடவில்லை. அவரை தூண்டிவிட்டது வெங்கட்பிரபு தான். ஜெய் முடிஞ்சா இந்த தோசை சவாலை ஏற்றுக்கொண்டு உங்கள் காதலிக்கு பரிமாறி அந்த புகைப்படத்தை வெளியிடுங்கள்’ என கூறியிருந்தார்.

வெங்கட்பிரபுவின் சவாலை ஏற்றுக்கொண்ட ஜெய் காதலி அஞ்சலிக்கு தோசை சுட்டுக் கொடுத்து அப்படத்தை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் தோசை போட்டியை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறேன் என்று சூர்யாவுக்கு தகவலும் தந்திருக்கிறார்.

எப்படியோ தோசை மூலமாக தங்கள் காதல் இன்னும் தொடர்கிறது என்பதை உறுதி செய்திருக்கிறது அஞ்சலி-ஜெய் ஜோடி.