பட பப்ளிசிட்டிக்காக நடிகர் ‘ஆரி’யை வம்பிழுக்கும் இங்கிலிஷ் பட இயக்குனர்!

aari issue news

தன்னை பற்றி தவறாக பதிவு செய்த தொலைக்காட்சியின் மீது புகார் அளிக்காமல் தனது  பட பப்ளிசிட்டிக்காக  நடிகர் ‘ஆரி’யை வம்பிழுக்கும் இங்கிலிஷ் பட இயக்குனர்!

நடிகர் ஆரியின் புகார்

‘இங்கிலிஷ் படம்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ என்பவர் பெயர் அறிவிக்கப்படாத திரைப்படம் இயக்குவதாகவும் அதில் நெடுஞ்சாலை ஆரி நடிக்க இருப்பதாகவும் அதற்கு துணை புதுமுக நடிகர்கள் தேவை என்று ‘ஜெகதீஷ் இயக்குனர்’ (முகப்புத்தக பெயர்) என்பவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு, ஆரியின் பெயரை பயன்படுத்தி, ஆண்களிடத்தில் பணம் பறித்தும், பெண்களிடத்தில் தவறாக பேசி கொண்டு இருக்கிறார் என நண்பர்கள் மூலம் ஆரிக்கு தகவல் வந்ததாம் .

எனவே ஆரி தனது பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க கமிஷனர் அலுவகத்தில் ‘ஜெகதீஷ் இயக்குனர் ‘ என்பவர் அவர் முகப்புத்தகத்தில் வெளியிட்ட, அந்த முகப்புத்தக நகலுடன் சென்று காவல் ஆணையாளர் அவரிடம் புகார் அளித்திருந்தார்.

ஆரி அளித்த புகார் மற்றும் ஜெகதீஷ் என்பவர் வெளியிட்டு இருந்த முகப்புத்தக பதிவு!

Complaint 01

Complaint 02

Fb Page

தொலைக்காட்சியின் பங்கு

ஆனால் ஒரு பிரபல தொலைக்காட்சி, “ஜெகதீஷ் என்பவர் ‘இங்கிலிஷ் படம்’ எனும் பெயரில் தமிழ் படம் இயக்குவதாகவும் அதில் ஆரி நடிப்பதாகவும் அதற்கு துணை நடிகர்கள் தேவை என தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஆண்கள் என்றால் பணமும் பெண்கள் என்றால் தவறாக பேசியும் வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என ஆரி புகார் தெரிவித்துள்ளார்” என செய்தி வெளியிட்டது..

உண்மையில் அந்த தொலைக்காட்சி தவறாக புரிந்து கொண்டு ,

‘இங்கிலிஷ் படம்’  இசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ என்பவர் இயக்கும் படத்தில்

என்பதற்கு பதிலாக

“ஜெகதீஷ் என்பவர் ‘இங்கிலிஷ் படம்’ எனும் பெயரில் தமிழ் படம் இயக்குவதாகவும்

என தவறாக செய்தி வெளியிட்டது.. நடிகர் ஆரி கொடுத்த புகாரிலோ அல்லது அவர் கொடுத்த பேட்டியிலோ இங்கிலிஷ் பட இயக்குனரை பற்றி எங்குமே புகார் சொல்லவில்லை..

நடிகர் ஆரியின் வருத்தம்!

இதனிடையே இங்கிலிஷ் பட இயக்குனர் நடிகர் ஆரியை பற்றி தவறாக புரிந்து கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க, ஆரியோ மறுநாளே அதற்க்கு விளக்கமும் வருத்தமும் தெரிவித்திருந்தார்.. அந்த விளக்கம் அப்படியே!

‘இங்கிலிஷ் படம்’ என்கிற தமிழ்த் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு வருத்தம் தெரிவித்த நடிகர் ஆரி!

‘இங்கிலிஷ் படம்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ என்பவர் பெயர் அறிவிக்கப்படாத திரைப்படம் இயக்குவதாகவும் அதில் நான் ( நெடுஞ்சாலை ஆரி) நடிக்க இருப்பதாகவும் அதற்கு துணை புதுமுக நடிகர்கள் தேவை தொடர்புக்கு 9688522162 என்று தனது தொலைபேசி எண்ணையும் ‘ஜெகதீஷ் இயக்குனர்’ (முகப்புத்தக பெயர்) என்பவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு இருந்தார். எனது பெயரை பயன்படுத்தி, ஆண்களிடத்தில் பணம் பறித்தும், பெண்களிடத்தில் தவறாக பேசி கொண்டு இருக்கிறார் என எனக்கு நண்பர்கள் மூலம் தகவல் வந்தது.

எனவே நான் எனது பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்கவும். சினிமா மீது ஆர்வம் கொண்டவர்கள் யாரும் இந்த பதிவை பார்த்து ஏமாறாமல் இருக்கவும் கமிஷனர் அலுவகத்தில் ‘ஜெகதீஷ் இயக்குனர் ‘ என்பவர் அவர் முகப்புத்தகத்தில் வெளியிட்ட, அந்த முகப்புத்தக நகலுடன் சென்று காவல் ஆணையாளர் அவரிடம் புகார் அளித்தேன்.. அது தொடர்பாக காவல் உதவி ஆணையாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டதின் பெயரில் ஜெகதீஷ் அவர்கள் செய்த தவறினை ஒப்புக்கொண்டு இனி இவ்வாறான நடவடிக்கைகளை ஈடுபட மாட்டேன் என்று வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கூறினார். இது சம்பந்தமான ஆவணங்கள் காவல் நிலையத்தில் உள்ளது

‘ஜெகதீஷ் இயக்குனர்’ என்பவர் முகப்புத்தகத்தில் போட்டு இருந்த பதிவை மட்டுமே நான் நகல் எடுத்து ஊடக நண்பர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் தகவல் அளித்தேன்..

ஜெகதீஷ் என்பவர் ‘இங்கிலிஷ் படம்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் போஸ்ட்டரை பயன்படுத்தி பதிவு போட்டு இருந்ததால் தான் ‘இங்கிலிஷ் படம்’ போஸ்டரை ஆதாரத்திற்காக மட்டுமே காண்பித்தேன் தவறான நோக்கத்தில் காட்டவில்லை.

ஊடக நண்பர்கள் வெளியிட்ட செய்தியினை இங்கிலீஷ் படத்தின் இயக்குனர் தவறாக புரிந்து கொண்டு ” இங்கிலிஷ் படம்” என்கிற தமிழ் திரைப்படத்தில் நான் நடிப்பதாகவும் அந்த இயக்குனர் குறித்து நான் புகார் அளித்ததாகவும் தவறாக செய்தியை அறிந்ததாக கேள்விப்பட்டேன்.

அது சம்பந்தமாக விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்..

மற்றபடி ‘இங்கிலிஷ் படம்’ படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உட்பட யாருக்கும், எவ்வகையிலும் இந்த புகாரில் தொடர்பில்லை. இது குறித்து என் பெயரையும், ‘இங்கிலிஷ் படம்’ படத்தின் பெயரையும் தவறாக பயன்படுத்தி பொய்யான விளம்பரம் செய்த ‘ஜெகதீஷ்’ என்பவர் மீதே இந்த புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரில் ‘இங்கிலிஷ் படம்’ படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது நான் புகார் அளிக்கப்பட்டதாக தவறான தகவல் பரவி வருவதாக அறிகிறேன். நான் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் நடுத்தர குடும்பத்தில் இருந்து பத்து வருடத்திற்கும் மேலாக உழைத்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். அதனால் ஒரு சினிமா கலைஞன் வலியும் ஒரு தயாரிப்பாளர் வலியும் நன்கு அறிவேன்.

‘இங்கிலிஷ் படம்’ இயக்குனரும் என்னைப் போன்று சினிமா பின்னணி இல்லாமல் உழைத்து ஒரு படத்தை இயக்கி இருப்பதாக அறிகிறேன். அவருடைய படத்திற்க்கோ அந்த தயாரிப்பாளருக்கோ எவ்வகையிலும் களங்கம் விளைவிக்கும் செயலை நான் செய்ய நினைக்கவில்லை,

மேற்கண்ட சில ஊடகங்கள் தவறாக வெளியிட்ட செய்திகளால் ‘இங்கிலிஷ் படம்’ தொடர்புடைய நபர்களை காயப்படுத்தி இருந்தால் நான் மனதார வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

இத்துடன் நான் புகார் அளித்த நகலையும் ஆதாரமாக அளித்துள்ளேன்.

நன்றி!

இங்கிலிஷ் பட இயக்குனர் புகார்

உண்மை இப்படி இருக்க, தவறாக வெளியிட்ட தொலைக்காட்சியின் மீது புகார் தெரிவிக்காமல், ஒரு குற்றமும் செய்யாத நடிகர் ஆரியின் மீது குற்றம் சொல்வது.. மக்கள் மத்தியில் ‘இங்கிலிஷ் படம்’ எனும் படத்திற்கு விளம்பரம் தேடவே என்பதை தவிர வேறென்ன சொல்ல!?

நடிகர் ஆரி மீது இங்கிலிஷ் பட இயக்குனர் போலீசில் அளித்த புகார்!

Complaint 01

Complaint 01

Complaint 01

Complaint 01

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *