வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் ஜெயராம்!


மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஜெயராம். இவரது மலையாளம் கலந்த தமிழை ரசிக்காதவர் யாருமே இருக்க முடியாது. தெனாலியில் உலக நாயகனுடன் இணைந்து காமெடியில் கலக்கி இருப்பார்.

தற்போது சமஸ்கிருத மொழியில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஜெயராம். “நமோ” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்காகத்தான் தனது எடையை குறைத்து வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகிறார்.
கிருஷ்ணனுக்கும், குசேலனுக்கும் இடையிலான நட்பை பற்றி பேசும் படமாக இருக்கும் என்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் குசேலனாக நடிக்கும் ஜெயராம் 20கிலோ வரை தனது எடையை குறைத்துள்ளாராம். மேலும் மொட்டை அடித்து வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறாராம்.

இத்திரைப்படத்தை விஜீஷ் மணி என்பவர் இயக்குகிறார். படத்தொகுப்பை பி.லெனின் மேற்கொள்கிறார். இவர் பல முறை தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜெயராமுடன் மமா நயான், சர்கார் தேசாய், மைதிலி ஜாவேகர், ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

மேலும் நடிகர் ஜெயராம் மணிரத்னம் இயக்கும் “பொன்னியின் செல்வன்” படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.