சூர்யாவுக்கு வில்லன் பிரசன்னா?


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சூர்யா கடந்த வருடம் என் கே ஜி காப்பான் போன்ற படங்களில் நடித்து இருந்தார். தற்போது சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் அரிய தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் தான் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க நடிகர் பிரசன்னாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரசன்னா ஏற்கனவே அஞ்சாதே துப்பறிவாளன் திருட்டுபயலே2 போன்ற திரைப் படங்களில் வில்லனாக நடித்திருந்தார். திரைப்படங்களின் மூலம் நடிகர் பிரசன்னாவுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் இடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.