“சூசைட் பண்ணிக்குவேன்” ; எடிட்டரை மிரட்டும் காமெடி நடிகர் சதீஷ்..!


ரத்தினசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘றெக்கை’ படத்தில் விஜய்சேதுபதி, லட்சுமி மேனன், கிஷோர், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.. ஆயுதபூஜை ரிலீஸாக வெளியாக உள்ள இந்தப்படத்தில் முதன்முறையாக நடிகர் விஜய்சேதுபதியின் நண்பனாக இணைந்து காமெடி பண்ணியுள்ளார் நடிகர் சதீஷ்..

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றபோது அதில் இந்தப்படத்தின் எடிட்டர் பிரவீன் ஆண்டனியைப்பற்றி தமாஷாக குறிப்பிட்டார் நடிகர் சதீஷ்.. அதாவது நம்மிடம் இருக்கும் பொருள் நண்பனுக்கு பிடித்திருந்தால் அவன் அதை எடுத்து வைத்துக்கொள்வதை போல, எடிட்டர் ஆண்டனியும் சதீஷ் நடித்த காட்சிகள் சிலவற்றை கட் பண்ணி எடுத்து வைத்து விட்டாராம்..

காரணம் படத்தின் நீளம் அதிகமாக கூடாது என்பதால் தானாம். இதை குறிப்பிட்ட சதீஷ், அடுத்து விஜய்யுடன் நடிக்கும் பைரவா படத்திற்கும் ஆண்டனி தான் எடிட்டர்.. அந்தப்படத்தில் மட்டும் என் காட்சியை கட் பண்ணட்டும், அதற்கப்புறம் இவர்தான் என் சாவுக்கு காரணம்னு எழுதிவச்சுட்டு சூசைட் பண்ணிக்குவேன் என செல்லமாக பயமுறுத்தினார்.. ஆமா இதுக்கெல்லாமா சூசைட் பண்ணிக்குவாங்க.