சூப்பர்ஸ்டாருன் மீண்டும் நடிக்கும் மீனா!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடித்து விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் ”தர்பார்”. இத்திரைப்படத்தின் ஓப்பனிங் சாங் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் சூரி நடிக்க உள்ளதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர்.

தற்போது இப்படத்தில் நடிகை மீனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சூப்பர்ஸ்டாருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மீனா. அதன்பின் எஜமான், முத்து, வீரா போன்ற படங்களில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.