கொரோனா வைரஸ் – விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட திரிஷா!


கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதற்கு திரையுலகமும் தப்பவில்லை. ஹாலிவுட் நட்சத்திரங்களை கொரோனா தாக்கி உள்ளது. நடிகர், நடிகைகள் வீட்டில் முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், நடிகை திரிஷா கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-

“கொரோனா வைரஸ் அல்லது கோவிட் 19. இது நம்மை பாதிக்காமல் தடுத்துக்கொள்ள முடியும். அதற்கு, நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இருமல் வந்தாலோ, தும்மல் வந்தாலோ உடனே கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பர் எடுத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும்.

உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் #Coronavirus வைரஸிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது?
@trishtrashers#UNICEF India நல்லெண்ண தூதர் என்ன சொல்கிறார் என்பதை கேளுங்கள்.
#COVID19 க்கு எதிராக பாதுகாப்பாக இருங்கள்.@NHM_TN@DrBeelaIAS@VijayaBaskaroflpic.twitter.com/5V4E05UfhQ

— UNICEF India (@UNICEFIndia) March 19, 2020

பயன்படுத்திய டிஸ்யூ பேப்பரை குப்பை தொட்டியில் போட்டு மூட வேண்டும். உங்கள் கண், மூக்கு, வாயை தேவை இல்லாமல் தொடக்கூடாது. அடிக்கடி இருபது வினாடிகளாவது சோப்பு போட்டு கையை கழுவ வேண்டும். கூட்டமாக இருக்கும் இடத்துக்கு போவதை தவிர்க்க வேண்டும்.

உங்களுக்கு இருமல், காய்ச்சல் வந்தாலோ, மூச்சு விட கஷ்டமாக இருந்தாலோ மற்றவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் பக்கத்தில் இருக்கிற சுகாதார மையம் அல்லது டாக்டரை பார்க்க வேண்டும். அந்த சமயத்தில் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் அல்லது துணியாலாவது மூடிக்கொள்ள வேண்டும்

இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *