நேர்கொண்ட பார்வை டீசரில் விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அஜித்


விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை புகழ் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார் அஜித்.. இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி தொடர்ந்து சமூக வலைதளங்களை அதிர வைத்து வருகிறது.

டிரைலர் முழுவதும் அடிச்சு தூக்கியிருக்கிறார் அஜித் என்றே சொல்லலாம். ட்ரெய்லரின் இறுதியில் ஒருத்தரின் விஸ்வாசத்துக்காக இன்னொருவரை அசிங்கப்படுத்துவதா? என்று போலீஸ் அதிகாரியிடம் கேள்வி எழுப்புகிறார். இது விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்காகவே அஜித் அட்வைஸ் சொல்வது போல அமைந்துள்ளது என்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.