அஜித் பட விநியோகஸ்தர் போட்ட நிபந்தனை


சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் இந்தப்படத்தை தயாரித்துவரும் சத்யஜோதி நிறுவனம் இந்தப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை 47 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளதாம்.

ஆனால் வாங்கிய விநியோகஸ்தரோ சத்யஜோதி தியாகராஜனிடம் ஒரு முக்கியமான நிபந்தனையை வித்தித்தாராம் . அதாவது பொங்கல் பண்டிகைக்கு இந்தப்படம் வெளியாகும்போது சோலோவாக வெளியானால் தான் இந்த விலையாம்.

கூடவே சூர்யா போன்ற இன்னொரு பெரிய நடிகரின் படம் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதால், இந்த விலையில் நான்கு கோடியை குறைத்துக்கொள்ள வேண்டும் என கூற அதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டார்களாம்.