தமிழகத்தை நம்பர்-1ஆக மாற்றும் முயற்சியில் அஜித்


சென்னை எம்.ஐ.டி., கல்லூரியில் பயிலும் இன்ஜினியரிங் மாணவர்கள் டீம் தக்சா என்ற பெயரில் ஒரு குழுவாக இணைந்து, ஆளில்லாமல் பறக்கும் விமானங்களுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றனர். இந்த குழுவிற்கு நடிகர் அஜித் முதன்மை ஆலோசகராக இருந்து உதவி வருகிறார். போட்டிகளுக்கு ஏற்றபடி ஹெலிகாப்டர்களை தயார் செய்யவும் உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், இந்த குழுவினர், சென்னையில் ஆளில்லா ஹெலிகாப்டர் மூலம் மருத்துவப் பொருட்களை எடுத்து செல்லும் ஹெலிகாப்டர்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஹெலிகாப்டரை செய்து முடிக்கும் தருவாயில் அந்த மாணவர்கள் உள்ளனர். இந்த முயற்சி முழுமையாக வெற்றி அடைந்து விட்டால், ஆளில்லா ஹெலிகாப்டர் மூலம், மருத்துவப் பொருட்களை எடுத்துச் செல்லும் வசதி படைத்த மாநிலமாக தமிழகம் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சியின் பின்னணியிலும் நடிகர் அஜித் நிறைய உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது