‘தல’ன்னு கூப்பிட சொல்லி காமெடி நடிகருக்கு கட்டளை போட்ட அஜித்..!


இன்றைய தேதியில் அஜித் ரசிகர்கள் யாருமே அவரை அஜித் என எந்த இடத்திலும் குறிப்பிடுவதில்லை… எங்கேயும் எப்போதும் ‘தல’தான் அவர்கள் பேச்சு மூச்சாக இருக்கிறது. 2001ல் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் வெளியான தீனா’ படத்தில் அஜித்தின் நண்பனாக வரும் மகாநதி சங்கர் அஜித்தை ‘தல’ என பட்டப்பெயர் வைத்து அழைக்க, அது இன்றளவும் அப்படியே நிலைத்துவிட்டது..

இந்த பட்டப்பெயரை அப்போது சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு ரசித்த அஜித், அதற்கடுத்து நடித்த படம் ஒன்றில் உடன் நடித்த காமெடி நடிகரை ‘தல’ என்று கூப்பிடச்சொல்லி டார்ச்சர் பண்ணிய தகவல் ஏதேச்சையாக அந்தப்படத்தில் வேலைபார்த்த புரடக்சன் தரப்பு நபருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளிப்பட்டது.

அந்தப்படம் தான் 2002ல் அஜித் நடித்த ‘ராஜா’. எழில் இயக்கிய இந்தப்படத்தில் காமெடியானாக வடிவேலு நடித்தார்.. அதுவரை விவேக்கையே காமெடியனாக நடிக்க வைத்த எழில் அப்போதுதான் வடிவேலுவுக்கு மாறியிருந்தார். அதேபோல அந்த சமயம் கவுண்டமணியில் ஆரம்பித்து விவேக், ரமேஷ்கண்ணா போன்றவர்களுடன் மட்டுமே நடித்து கொண்டிருந்த அஜித்திற்கு மைனர் மாப்பிள்ளை, ஆசை படங்களுக்கு பிறகு வடிவேலுவுடன் நடிக்கும் படம்..

அந்தப்படத்தில் வடிவேலுவின் ‘மாப்ளே’யாக வருவார் அஜித்.. அதாவது பணக்கார அஜித்துக்கு சொந்தத்தில் எடுபிடியாக வேலை செய்யும் மாமன் கேரக்டர் அது. அந்தப்படத்தை இப்போதும் கூட கவனித்து பார்த்தால் ஒரு விஷயம் நன்றாக தெரியும். அதாவது வடிவேலுவை மட்டும் அஜித் எப்போதுமே வாடா, போடா என சகட்டுமேனிக்கு திட்டுவார்.. கூப்பிடுவதும் கூட அப்படித்தான்.

ஆனால் வடிவேலுவோ மற்ற நண்பர்களிடம் அஜித்தை பற்றி பேசும்போது மட்டும் தான் ‘இவன் என்னய்யா இப்டி பண்றான்’ என்கிற மாதிரி சொல்வாரே தவிர அஜீத்திடம் பேசும்போது ‘என்ன மாப்ள இப்படி பண்ணிட்ட.. வேனாம்யா விட்ருய்யா” என டீசன்ட்டாகவே பேசியிருப்பார்..

கதைப்படி அவரும் அஜித்தை வாடா போடா என அழைப்பதாகத்தான் வசனங்களை எழுதியிருந்தாராம் இயக்குனர் எழில். ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அஜித்துக்கு, படத்தில் தான் என்றாலும் வடிவேலு தன்னை மரியாதை குறைவாக அழைப்பது சுத்தமாக பிடிக்கவில்லை.. அப்போதுதான் இந்த ‘தல’ பட்டம் வேறு கிடைத்திருந்தது..

அதனால் இயக்குனரை அழைத்து வடிவேலு இப்படி பேசுவதான வசனங்களை தூக்குங்கள் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். அதுமட்டுமல்ல அதற்கடுத்து படமாக்கும் காட்சிகளில் வடிவேலுவை தன்னை ‘தல’ என கூப்பிடுமாறும் வசனங்களை மாற்றச்சொன்னாராம். இன்னும் கொஞ்சநாள் தான் அஜித்-வடிவேலு காம்பினேஷன் ஷூட்டிங் என்கிற நிலையில் கையை பிசைந்த இயக்குனர் எழில், அதுவரை எடுத்த காட்சிகளின் வசனங்களை டப்பிங்கில் சரி பண்ணிக்கொள்ளலாம் என்று அஜித்தை கூல் பண்ணினாராம்..

அடுத்தபடியாக வடிவேலுவிடம் சென்று மீதி இருக்கும் காட்சிகளில் அஜீத்த ‘தல’ என சொல்லச்சொன்னாராம். ஆனால் வடிவேலு வீராப்புக்காரர் அல்லவா.? அதெல்லாம் முடியவே முடியாது என கறாராக சொல்லிவிட்டாராம். தன்னை ஆரம்பகாலத்தில் இருந்து வளர்த்துவிட்ட விஜயகாந்தையே பின்னாளில் ‘வருங்கால முதலமைச்சர்’ என ஒரு படத்தில் (இது 2005க்குப்பின் நடந்த கதை) புகழ்ந்து பேச மறுத்து விலகிய வடிவேலுவா, அஜீத்த தல என கூப்பிட சம்மதிப்பார்..? எப்படியோ ஒருவழியாக படத்தை முடித்தார் எழில்..

அஜித்துடன் கூடவே வரும் பாத்திரத்தில் வடிவேலு கடைசியாக நடித்த படம் இது தான்.

இன்னொரு கொசுறு தகவல்.. 1995ல் அஜித்-விஜய் காம்பினேஷனில் உருவான ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் வடிவேலு நடித்திருந்தாலும் அந்தப்படத்தில் இருவரும் சேர்ந்து வரும் காட்சி ஒன்றுகூட இல்லை. இந்தப்படம் ரிலீஸானபோது, அஜித், விஜய் ரசிகர்மன்றம் என எதுவும் இல்லை.. அவர்களுக்கு மார்க்கெட் வேல்யூவும் இல்லை.. வடிவேலு ரசிகர் மன்றம் சார்பில் தான் பல தியேட்டர்களில் டிக்கெட்டே விற்கப்பட்டது என்பது உபரி தகவல்.