ரசிகர்களால் 50 கோடி முறை கேட்கப்பட்ட அஜித்தின் பாடல் – புதிய சாதனை


கடந்த ஆண்டு சிவா இயக்கத்தில் நடிகர் அஜீத் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் விசுவாசம். நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன.

இதில் கண்ணான கண்ணே என்ற பாடல் யூடியூப்பில் சாதனை படைத்தது.

இப்போது ‘விஸ்வாசம்’ பாடல்கள் மற்றுமொரு சாதனையைப் புரிந்துள்ளது. ஆடியோ வடிவில் இந்தப் பாடல் 500 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்துள்ளது. வீடியோக்களை பார்வைகளாகக் கணக்கிடுவது போல், ஆடியோ கேட்பதை ஸ்ட்ரீமிங் என்று சொல்வார்கள். அந்த வகையில் ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்கள் இதுவரை 50 கோடி முறை கேட்கப்பட்டுள்ளது.