தனித்தனியா காட்டுனத இப்போ ஒண்ணா காட்டபோகும் தல..!


அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளிவர உள்ள திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரல் ஆகியது.

இப்படத்தில் ஒரு குத்துப்பாட்டு உள்ளதாக சமீபத்தில் இப்படத்தின் நடன இயக்குனர் கூறியுள்ளார். இப்படம் அஜித்தை வைத்து சிவா இயக்கும் நான்காவது படமாகும். இப்படத்திற்கு D.இமான் இசையமைத்துள்ளார். அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

ஏற்கனவே சிவா படங்களில் சென்டிமெண்ட் காட்சிகள் பெரிதும் பேசப்படும். இப்படி இருக்கும் நிலையில் வீரம் படத்தில் தம்பியின் சென்டிமென்ட், வேதாளம் படத்தில் தங்கையின் சென்டிமென்ட், விவேகம் படத்தில் மனைவி சென்டிமென்ட் வைத்துள்ளார். ஆனால் விசுவாசம் படத்தில் இந்த 3 சென்டிமென்ட் உடன் சேர்த்து குடும்ப சென்டிமென்ட் உள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர்.