20 டேக்குகள் வாங்கி கமலை பெருமைப்படுத்திய அக்சரா..!


நடிப்பு என வரும்போது நடிகர் திலகத்துக்கு அடுத்தபடியாக பேசப்படுபவர் உலக நாயகன் கமல்ஹாசன் தான்.. அவரது மூத்த மகள் ஸ்ருதி, வேறு விதங்களில் கமலின் பெயரை கெடுக்கும் விதமாக நடந்துகொண்டாலும் நடிப்பில் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு ஸ்கோர் பண்ணிவிடுகிறார். அதில் அவரை பெரிய அளவில் குறை சொல்ல முடியாது..

அதற்போது கமலின் இரண்டாவது மகள் அக்சராவும் நடிகையாகி விட்டார் அல்லவா..? இந்தியில் ஷமிதாப் படத்தில் நடித்தவரை, போதும் என வலுகட்டாயமாக தமிழ் சினிமாவுக்கு அனுப்பி வைத்துவிட்டது பாலிவுட். தற்போது அஜித் நடிக்கும் ‘விவேகம்’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் அக்சரா ஹாசன்.

இந்தப்படத்தில் நடித்தது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் அக்சரா கூறிய விஷயம் தான் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. “இந்தப்படத்தில் நடிக்கும்போது சில காட்சிகளுக்கு 20 டேக் வாங்கினேன். அப்பல்லாம் அஜீத் சார்தான் கூல் கூல்…நோ டென்ஷன்னு சொல்லி என்னை ரிலாக்ஸ் பண்ணினார்” என கூறியுள்ளார் அக்சரா.. இதை பார்க்கும்போது நிச்சயம் கமல் பெயரை இவர் காப்பாற்றி விடுவார் என்கிற நம்பிக்கை தோன்றுகிறது தானே..?