நடிகர் செய்த காரியத்தால் அமலாபால் அதிர்ச்சி..!


கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை அமலாபால் சொகுசு கார் ஒன்றை வெளிநாட்டில் இருந்து வாங்கினார். அதை கேரளாவில் பதிவு செய்தால் சுமார் 15 லட்சம் வரி கட்டவேண்டும் என்பதால், புதுச்சேரியில் பொய்யான முகவரி கொடுத்து வெறும் ஒண்ணே முக்கால் லட்சம் மட்டுமே வரி செலுத்தி பதிவு செய்தார். இதன்மூலம் அவர் வரி ஏய்ப்பு மோசடி செய்தது தெரியவந்தது.

அவரை போலவே நடிகர் பஹத் பாசில், நடிகரும் எம்.பியுமான சுரேஷ்கோபி உள்ளிட்ட பலர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த தங்களது சொகுசு கார்களை கேரளாவில் பதிவு செய்யாமல் புதுச்சேரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பு மோசடி செய்த விஷயம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விஷயத்தில் நடிகை அமலாபால், பஹத் பாசில் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் தான், இத்தாலியில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பில், தான் புதிதாக இறக்குமதி செய்துள்ள ஸ்போர்ட்ஸ் மாடல் லம்பார்க்கினி காரை கேரளாவிலேயே பதிவு செய்து அசத்தியுள்ளார் நடிகர் பிருத்விராஜ்.

இதை கேரளாவில் பதிவு செய்வதற்காக சுமார் 43 லட்ச ரூபாயை வரியாக செலுத்தியுள்ளார் பிருத்விராஜ். கேரளாவின் காக்கநாடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பிருத்விராஜின் இந்த நேர்மையான செயலை குறிப்பிட்டு, அமலாபாலை சமூக வலை தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். தற்போதுதான் இந்த பிரச்சனை ஓய்ந்துள்ள நிலையில், இது என்னடா வம்பா போச்சு என சங்கடத்தில் இருக்கிறாராம் அமலாபால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *