“அடிக்கிற கை தான் அணைக்கும் ; ஆனந்தியை அணைத்த ஜி.வி.பிரகாஷ்..!

என்னமாய் ருத்ர தாண்டவம் ஆடினார் ஆனந்தி..? ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தில் தன்னை ஆபாசமாக காட்டி தனது எதிர்காலத்தையே சீரழித்துவிட்டார்கள் என கூப்பாடு போட்டார்.. அதற்கேற்ற மாதிரி ஆனந்திக்கு வாய்ப்புகளும் வந்ததுபோல தெரியவில்லை.. ஏண்டா இந்தப்படத்தில் நடித்து இமேஜை கெடுத்துக்கொண்டோம் என பீல் பண்ணிய ஆனந்தி, ஜி.வி.பிரகாஷையும் அந்தப்படத்தின் இயக்குனர் ஆதிக்கையும் கழுவி ஊற்றாத குறையாக புலம்பினார்.

ஆனால் அடிக்கிற கை தான் அணைக்கும் என்கிற பழமொழிப்படி இப்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் ஆனந்தி நடிக்கிறார். அதற்கு காரணமும் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ வெற்றி சென்டிமெண்ட் தானாம். இந்தப்படத்தை ‘டார்லிங்’ பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்குகிறார். சர்ச்சைக்கு பெயர்போன லைக்கா நிறுவனம் படத்தை தயாரிகிறது.