ஒளி இயக்குனரின் பிறந்தநாளில் ஆட்டம் போட்ட அங்காடி நடிகை!

சில தினங்களுக்கு முன் நடிகரும், இசையமைப்பாளருமான ஒளி இயக்குனரின் பிறந்தநாள்… விஜய் அஜித் இருவருக்குமே லைப் கொடுத்தவர் அவர். இந்தவருடம் புல் குஷி மூடில் இருந்த அவர்தனது நட்பு வட்டாரத்தில் உள்ள சினிமா நண்பர்களுக்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்ட பிறந்தநாள் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்.. பார்ட்டி என்றால் உற்சாகம் இல்லாமலா..?

இந்தப்பார்ட்டிக்கு அங்காடி நாயகியும் வந்திருந்தாராம். அவர் எப்படி இவருக்கு பிரண்ட் ஆனார் என்கிற ஆராய்ச்சிக்கு நாம் போகவேண்டாம். பார்ட்டியில் கொஞ்சம் ஓவராகவே உற்சாகம் ஆன அந்த பைவ் எலி நடிகை அங்கிருந்த பேரர் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஒருகட்டத்தில் அவரை அறைந்துவிட்டாராம்.

இந்த களேபரம் கண்டு அங்கே வந்த ஒளி இயக்குனரும் அந்த பேரரை தன் பங்குக்கு கவனித்தாராம். இந்த விவகாரம் ஹோட்டல் மேனேஜருக்கு போக, அவர் வந்து தலையிட்டு சமாதானப்படுத்தினாராம். ஆனால் இங்கே தான் வைத்தார் பாருங்கள் ட்விஸ்ட்.

இந்த ரகளையில் சேதமான பொருட்களின் மதிப்பையும் கணக்கிட்டு ஒரு பெரிய தொகையை இயக்குனரிடம் பில்லாக நீட்டி, காசை கறந்துவிட்டுத்தான் அனுப்பினார்களாம். சமீபத்தில் வெளியான ‘யாகாவாராயினும் நா காக்க’ படத்தின் கதைக்கருவே இப்படி ஹோட்டலில் குடித்துவிட்டு ரகளை பண்ணுவதால் வந்த விளைவைத்தான் சொன்னது. ஒருவேளை அங்காடி நடிகை அந்தப்படத்தை பார்க்கவில்லையோ என்னவோ..?