ஓவர் ஆட்டம் ; அனிருத்துக்கு நிரந்தர தடை..?

குறுகிய காலத்தில் சிறிய வயதிலேயே கிடைக்கும் புகழை எல்லோராலும் தாங்கிக்கொள்ளவும் தக்கவைத்துக்கொள்ளவும் முடிவதில்லை. ஆனால் ஒருசிலர் தங்களது இயல்பான குணத்தால் மென்மேலும் புகழ் பெறுகின்றனர்.. ஆனால் இன்னும் சிலரோ, ஓவராக ஆடி இருந்த இடம் கூட தெரியாமல் போய்விடுகின்றனர்..

ஏ.ஆர்.ரகுமானுக்கும் அவரது இளம் வயதில் தான் புகழ் கிடைத்தது.. அதை அவர் எந்தவிதத்திலும் தவறாக பயன்படுத்தவில்லை.. அவ்வளவு ஏன்.. அவரை அறிமுகப்படுத்திய மணிரத்னத்துடன் இன்றுவரை எந்தவித மனக்கசப்பும் இல்லாமல் பணியாற்றி வருகிறார்.

ஆனால் அனிருத்தின் கதையை எடுத்துக்கொண்டால் அவருக்கும் அறிமுகமான முதல் படத்திலேயே யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு புகழ் கிடைத்தது. ஆனால் அந்த புகழ் அவரை தலைகீழாக நடக்கவைத்தது.. சகவாசம் சரியில்லாமல் போய் ‘பீப்’ பாடலுக்கு இசையமைக்கும் அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துகொண்டார்.. விளைவு..?

இப்போ என்ன ஆச்சு..? அவருக்கு ஆதரவு கொடுத்து அரவணைத்து வந்த ரஜினி குடும்பம், குறிப்பாக தனுஷ் தன்னுடைய கொடி படத்திலேயே அனிருத்தின் சங்காத்தம் வேண்டாம் என ஒதுங்கிவிட்டார். தான் இயக்கும் படத்தில் கூட ஷான் ரோல்டனைத்தான் இசையமைக்க வைத்துள்ளார்.

அனிருத்தின் ‘பீப்’ விவகாரத்தை ஆண்பிள்ளையான தனுஷே எதிர்க்கும்போது, பெண்பிள்ளைகளை பற்றி சொல்லவா வேண்டும்.. சௌந்தர்யா தான் இயக்கம் வி.ஐ.பி-2விலும், ஐஸ்வர்யா தான் இயக்கவிருக்கும் ‘மாரியப்பன்’ படத்திலும் ஷான் ரோல்டனையே ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.. இதன்மூலம் அனிருத்தை ரஜினி-தனுஷ் குடும்பம் சுத்தமாக கட்டம் கட்டிவிட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது.