அஞ்சல கைவிட்டாலும் அஞ்சலி கைவிடமாட்டார் ; தெம்பான விமல்..!


நடிகர் விமலுக்கு என்று ஒரு ராசி இருக்கிறது. அது என்னவென்றால் அவர் நடிக்கும் படங்கள் ரிலீசானால் தொடர்ந்து ரிலீஸாகி கொண்டே இருக்கும்.. இல்லையென்றால் படங்களே இல்லாத நிலை போன்ற தோற்றம் உருவாகும்.. ஆனால் அவரது பலவீனமும் கூட அதுதான்.. ஒருவழியாக கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் நடித்த ‘அஞ்சல’ படத்தை ரிலீஸ் செய்தார்கள்..

படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.. ஆனாலும் விமல் முழு மூச்சாக நம்பியிருக்கும் ‘மாப்ள சிங்கம்’ படத்திற்கு இப்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. மார்ச்சில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தில் விமலுக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.. அதனால் அந்த அஞ்சல கைவிட்டாலும் இந்த அஞ்சலி தன்னை கரைசேர்த்து விடுவார் என தெம்பாக இருக்கிறாராம் விமல்.