மருதநாயகத்தில் கமலுக்கு பதில் வேறு நடிகரா?


கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் மருதநாயகம். கமலஹாசனின் கனவுப் படமான மருதநாயகம் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. அதன் பின்பு பட்ஜெட் மற்றும் சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட பல காரணங்களால் படிப்பிடிப்பை தொடர்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. இப்போது அதில் நடித்தவர்கள் தோற்றம் மாறி இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

இதுகுறித்து கமல்ஹாசன் கூறும்போது,

“மருதநாயகம் படம் வரும். 30 நிமிட காட்சிகளை எடுத்து விட்டேன். அதுதான் கடினமான பகுதி. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு பிறகு என்றுதான் காட்சிகள் விரிகின்றன. எனவே தோற்றம் பற்றிய பிரச்சினை எழாது.” என்றார்.
இந்த நிலையில் மருதநாயகம் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் தற்போது பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் கமல்ஹாசன் கூறும்போது,

“மருதநாயகம் படம் தயாராகும். எனக்கு அரசியல் பணிகள் இருப்பதால் மருதநாயகம் படத்தில் நான் இருக்க மாட்டேன். எனக்கு பதில் வேறு நடிகர் இருப்பார்” என்றார்.

இதன் மூலம் மருதநாயகம் படத்தில் இருந்து கமல்ஹாசன் விலகுவது உறுதியாகி உள்ளது. ஆகையால் வேறு நடிகரை வைத்து பட வேலைகள் தொடங்கப்படும் என்று தகவல் கசிந்துள்ளது.

கமலுக்குப் பதில் விக்ரம் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அல்லது வேறு நடிகர் நடிப்பாரா என்று மருதநாயகம் திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே ஆவல் எழுந்துள்ளது.