ஆண் வேடத்தில் அனுஷ்கா

“ருத்ரமாதேவி” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார் என்பது தெரிந்த ஒன்று, ஆனால் அதே படத்தில் ஒரு சில காட்சிகளில் ஆண் வேடம் கொண்டு நடிக்கிறார் என்பது புதிய தகவல்.

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க திரைப்படம் என்பதால், சில காட்சிகளில் தான் இவ்வாறாக நடிக்க வேண்டி இருந்தது என்கின்றனர் பட குழுவினர்.

குணசேகர் இயக்கம் இப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது. ரானா, அல்லு அர்ஜுன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு, இளையராஜா இசை அமைக்கிறார்.