ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் அசின் ?


தமிழ் படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை அசின்.

விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர்.
இந்தியில் இவரது அறிமுகம் கஜினி ரீமேக்கின் மூலம் அரங்கேற்றமானது. அதன் பின் சில இந்திப் படங்களில் நடித்து விட்டு தொழில் அதிபரான ராகுல் சர்மா என்பவரை மணந்து கொண்டார்.


திருமணத்திற்கு பின்பு திரையுலகில் இருந்து விலகி இருந்தார்.

அவருக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.

இனிமேல் அவர் மீண்டும் நடிக்க வரமாட்டார் என்ற ரசிகர்கள் முடிவு செய்திருந்த நிலையில், மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப்பின் ரசிகர்கள் அசினை திரையில் கண்டுகளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.