இரும்பு குதிரையில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவிக்கும் அதர்வா..!

 

தமிழில் வாமனன் படத்தில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அந்தப்படம் சரியாக போகாததால் அப்போது யாரும் அவரை சரியாக கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து நடித்த சில படங்களும் தோல்வியை தழுவ, அதன்பின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வெளியான ‘எதிர்நீச்சல்’ படம் மட்டும் சிவகார்த்திகேயன் புண்ணியத்தில் தப்பித்தது.

 

அதன் பிறகு வணக்கம் சென்னை,180, அரிமா நம்பி, இரும்புக் குதிரைகள், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை என இவர் நடித்தத்தில் அரிமா நம்பி மட்டும் பரவாயில்லை.. அதை விடுங்கள்.. படம் ஓடுகிறதோ இல்லையோ, படத்தில் நடிக்கும் ஹீரோக்களை மகுடி ஊதி வசியப்படுத்தும் கலையில் வல்லவர் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்..

 

இவரது ராசியோ என்னவோ இவருக்கு ஜோடியாக நடித்தவர்கள் எல்லாம் வாரிசு நடிகர்கள் தான்.. ஆனால் சிவாஜி குடும்பத்து வாரிசு மட்டும் இவர் வலையில் சிக்கவில்லை. மற்றபடி, வைரா ராஜா நாயகனும், இரும்புக்குதிரை நாயகனும் இவர் போட்ட சொக்குப்பொடியில் மயங்கித்தான் போய்விட்டனராம்.

 

இதில் வை ராஜா நாயகனுக்கே படம் இல்லை என்பதால் அவரை கழட்டிவிட்ட பிரியா ஆனந்த், இரும்புக்குதிரை நாயகனுடன் மட்டும் விடாமல் நட்பு பாராட்டி வருகிறாராம்.. ஒரு காலத்தில் இரும்புக்குதிரையில் ஏறிய நாயகனும் இப்போது வரை இறங்க முடியாமல் தடுமாறி வருகிறாராம். வை ராஜா நாயகனுக்காவது அவரது தந்தை கடிவாளம் போட்டு இழுக்கிறார். இரும்புக்குதிரை நாயகனுக்கு எந்த தடுப்பணையும் இல்லாதது பிரியா நடிகைக்கு ரொம்பவே வசதியாக போய்விட்டது என்கிறார்கள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *