‘பைரவா’ படத்துக்கு வரிவிலக்கு அளித்தது தமிழக அரசு..!

 

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நாளை வெளியாகவுள்ளது சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே பரதன் இயக்கிய ‘அழகிய தமிழ் மகன்’ படத்திலும் விஜய் இரண்டு வேடங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது. விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.

 

ஏற்கனவே படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பதாலும், ‘பைரவா’ என தமிழில் டைட்டில் வைக்கப்படிருப்பதாலும் இந்தப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே அறிவித்ததைவிட இன்னும் கூடுதலாக தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்களில் திரையிடப்பட உள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு இனிப்பு செய்தியாக அமைந்துள்ளது..

 

இதற்கு முன்பெல்லாம் விஜய் படம் ரிலீசாகும்போது அரசு தரப்பில் இருந்து ஏதோ ஒரு விதத்தில் நெருக்கடியை சந்தித்தே வந்திருக்கிறது. தவிர அரசு சலுகைகளும் மறுக்கப்பட்டே வந்திருக்கின்றன. அதற்கு காரணம் நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.. அனால் இப்போது அரசு கட்டிலில் மாற்றம் நிகழ்ந்திருப்பது விஜயக்கு சாதகமாகவே மாறியிருக்கிறது என்றே தோன்றுகிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *