“காலா வில்லன் என் மீது கை வைத்தார்” ; கதறும் விஷால் பட நடிகை


காலா படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர். இவர்மீது சமீபத்திய ஒரு பேட்டியில் பாலியல் ரீதியான குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.

பத்து வருடங்களுக்கு முன் பீக்கில் இருந்த தனுஸ்ரீ தத்தாவை 2௦௦9ல் நானா படேகர் இந்தியில் நடித்த ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்கிற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்காக ஒப்பந்தம் செய்திருந்தார்களாம். ஆனால் நடனக்காட்சியின்போது மிகவும் ஆபாசமான மூவ்மென்ட் ஒன்றை செய்ய வற்புறுத்திய நானா படேகர் தனுஸ்ரீ தத்தாவிடம் தவறாக நடந்துகொண்டாராம்.

ஆனால் இதை எதிர்த்து குரல்கொடுத்த தனுஸ்ரீயை படத்திலிருந்து தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்தை வைத்து அந்த பாடல் காட்சியை படமாக்கினார்களாம்.
அந்தசமயத்தில் தனுஸ்ரீ தத்தா தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நானா படேகர், தனுஸ்ரீ தனக்கு மகள் மாதிரி என்றும், இந்த 35 வருடங்களில் தன்மேல் யாரும் இப்படி குற்றம் சாட்டியதில்லை என்றும் கூறி பிரச்சனையை அமுக்கி விட்டாராம்..

இந்த விஷயங்களை தற்போது மீண்டும் ஒரு பேட்டியில் நினைவுபடுத்தியுள்ள தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் போன்றவர்கள் கஷ்டப்படும் சில விவசாயிகளுக்கு பணம் கொடுத்து நல்லவர்களாக கட்டிக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட நபர்களை ரஜினிகாந்த், அக்சய் குமார் போன்ற மிகப்பெரிய நடிகர்கள் தங்கள் படங்களில் வாய்ப்பு தராமல் விலக்கி வைக்கவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *