“எலும்பு டாக்டர்” ; ஹெச்.ராஜாவை வறுத்தெடுத்த கமல்..!


தமிழக பா.ஜ.க பிரமுகர்களில் ஒருவரான ஹெச்.ராஜா வசைபாடுவதில் டாக்டரேட் பட்டம் வாங்கியவர். யாரையும் தனது துஷ்டத்தனமான வார்த்தைகளால் கரித்துக்கொட்டுவார்.. அப்படித்தான் சமீபத்தில் உலக நாயகன் கமல் பற்றி கிண்டலாக பேசுவதாக நினைத்து, “கமல் முதுகெலும்பு இல்லாதவர்’ என்கிற வார்த்தைகளில் சாடினார்..

நேற்று தமிழக அரசின் அமைச்சர் சிலருக்கு கமல் காட்டமான அறிக்கை மூலம் நச் பதிலடி கொடுத்த கமல், ஹெச்.ராஜாவையும் விட்டு வைக்கவில்லை. ‘எலும்பு டாக்டர்’ அவர்களே என ராஜாவுக்கு புதுப்பட்டம் சூட்டி அவரை கௌரவப்படுத்தியுள்ளார் கமல்.. வாயைக்கொடுத்து ஏன் இந்த ராஜா இப்படி வாங்கிக்கட்டி கொள்கிறார் என நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் உடன் இருக்கும் பா.ஜ.க காரர்கள்.