ரஜினிக்கு நீ கட்டுப்பா அபராதம் ; பைனான்சியரை கதறவிட்ட நீதிமன்றம்..!


உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ள நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதனாலேயே ரஜினியின் மீது பொறாமை கொண்டவர்கள், அவர்மீது எந்தவிதமாகவெல்லாம் சேற்றை வாரி இறைக்கலாம் என அரசியல்வாதிகளும் அவரை பிடிக்காத சினிமாகாரர்களும் ரூம் போட்டு யோசித்து வருகிறார்கள் இந்த இம்சைகள் போதாதென்று பிரபல சினிமா பைனான்சியரான முகுந்த்சந்த் போத்ரா ரஜினி மீது வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்திடம் செமத்தியாக வாங்கிக்கட்டி கொண்டுள்ளான்..

கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினி மீது ஒரு வழக்கு தொடர்ந்தான் போத்ரா. அதில் அந்த வெண்ணெய் வெட்டி சிப்பாயி போத்ரா என்ன சொல்லியிருந்தான் தெரியுமா..? ரஜினியின் உறவினரான, இயக்குனர் கஸ்துாரி ராஜாவுக்கு, கடன் கொடுத்திருந்தேன். ‘கடன் தொகையை, திருப்பி தரவில்லை என்றால், அதை ரஜினி கொடுப்பார்’ என, கஸ்துாரி ராஜா கூறியிருந்தார். அவர் கொடுத்த காசோலை, வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியது. ரஜினியின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக, கஸ்துாரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, ரஜினிக்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தான்.

இப்படி ஒரு வழக்கை எங்கேயாவது கேள்விப்பட்டிருக்க முடியுமா..? கஸ்தூரிராஜா பணம் தரவில்லையென்றால், அவர்மீது வழக்கு போடலாம்.. சரி, ரஜினி தருவார் என கஸ்தூரி ராஜா சொல்லியிருந்தாலும், ஒருவேளை அதற்கான ஆதாரங்கள் இருந்தால், அதாவது ரஜினி ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தால் ரஜினி மீது வழக்கு தொடர முகாந்திரம் இருக்கிறது.

ஆனால் இந்த போத்ரா என்ன சொல்கிறான் என்றால், ரஜினியின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக, கஸ்துாரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, ரஜினிக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளான். நல்ல மனநிலையில் உள்ளவன் எவனும் இப்படி ஒரு அறிவுகெட்ட வழக்கிற் போட்டிருக்க மாட்டான். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், போத்ராவின் மண்டையில் குட்டு வைத்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.

இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..? பொதுவாக, பிரபலங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தால், பத்திரிகைகளில், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்; சில நாட்களுக்கு, அந்த செய்தி பேசப்படும். அதுபோன்ற, விளம்பரம் பெறுவதற்காக, இப்படி ஒரு மனுவை, மனுதாரர் தாக்கல் செய்துள்ளார்.பெயரை தவறாக பயன்படுத்தினால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, அந்த நபரைப் பொறுத்தது.பெயரை தவறாக பயன்படுத்தியவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, அந்த நபரை, நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது.

எனவே, இந்த வழக்கை முழுமையாக படித்துப் பார்த்தால், மலிவான விளம்பரத்துக்காக, சட்ட நடவடிக்கையை துஷ்பிரயோகம் செய்தது தெரிகிறது.இதுபோன்ற வழக்குகளை அனுமதித்தால், பொதுமக்களிடம் விளம்பரம் பெறுவதற்கு, உரிமம் கொடுத்தது போலாகி விடும். மேலும், இந்த மனு, விசாரணைக்கு உகந்தது அல்ல. இதில், எந்த அடிப்படையும் இல்லை; மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு, 25 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது. அதை, ரஜினிக்கு செலுத்த வேண்டும்.என உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *