ஆடு பகை குட்டி உறவு ; சின்மயி எடுத்த நிலைப்பாடு..!


கடந்த மாதம் கவிஞர் வைரமுத்து மீது பகிரங்க குற்றச்சாட்டு கூறினார் பின்னணி பாடகி சின்மயி. அதன் பரபரப்பு இப்போது அடங்கிவிட்டது போல தோன்றினாலும் இன்னும் புகைச்சல் நின்றபாடு இல்லை. இந்தநிலையில் ஆடு பகை ஆனால் குட்டி உறவு என்பது போல், வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து எழுதிய பாடலை பாடியுள்ளார் சின்மயி.

தெலுங்கில் அர்ஜூன்ரெட்டி, கீதா கோவிந்தம் உள்பட பல படங்களில் நடித்தவர் விஜய தேவரகொண்டா. இவர் தமிழில் நோட்டா படத்தில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளார் விஜய தேவரகொண்டா.

இணையத்தில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் தமிழில் மந்திர கண்ணிலே, தெலுங்கில் நீ வெனகலே என்ற வரிகளில் தொடங்குகிறது. பானு ஸ்ரீதேஜா இயக்கியுள்ள இந்த பாடலுக்கு சவுரவ் -துர்கேஷ் இசையமைக்க, கபிலன் வைரமுத்து தமிழில் மந்திர கண்ணிலே என்ற பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடலைத்தான் சின்மயி பாடியிருக்கிறார்.