விஜய்யை மறைத்தார்கள்.. ரஜினியை காட்டினார்கள்..!


சில நாட்களுக்கு முன் விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றதல்லவா..? அந்த விழாவில் விஜய்யின் ஆசு அசலான மெழுகு சிலை ஒன்றை செய்து விழாமேடையில் வைத்து திறக்க ஆசைப்பட்டார்களாம் ரசிகர்கள்.. ஆனால் அப்படி செய்தால் தேவையில்லாத அரசியல் சாயம் பூசப்பட்டு படத்திற்கு ரிலீசின்போது சிக்கல் வரலாம் என நினைத்து தயாரிப்பாளர் தாணுவும் விஜய்யும் கூட இதற்கு தடைபோட்டு விட்டார்கள்…

ஆனால் அதே தாணு தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாக்கி வரும் கபாலி படத்தில் ரஜினியின் வித்தியாசமான கெட்டப்பை சாக்லேட் சிலையாக வடிவமைத்து சென்னையில் உள்ள பேக்கரி ஒன்று பார்வைக்காக வைத்துள்ளது. நாள்தோறும் ரசிகர்கள் பலர் இந்த சிலையுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்கின்றனர்.. இதை பார்த்து விஜய் ரசிகர்களின் காதுகளில் புகை வராத குறை தானாம்.