தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா 7ம் தேதி நடைபெறுகிறது.


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 7-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் “சும்மா கிழி” என்ற டைட்டில் சாங் வெளியாகி நாடு முழுவதும் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 7ம் தேதி சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறது சூப்பர்ஸ்டார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்தப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராகி வரும் இத்திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *