“9௦ml போன்ற படங்கள் கலாச்சார சீரழிவுக்கு அழைத்துச் செல்லும்’ ; தனஞ்செயன் தாக்கு


சமீபத்தில் ஓவியா நடிப்பில் 90ml என்கிற படம் வெளியாகியுள்ளது. அடல்ட் காமெடி என்கிற பெயரில் நான்கு இளம்பெண்கள் ஒன்று சேர்ந்தால் என்னவெல்லாம் அழிச்சாட்டியம் செய்வார்கள் என்பதை இதுதான் பெண்ணுரிமை என்பது போல படமாக்கியிருந்தார் பெண் இயக்குனரான அனிதா உதீப். இப்படி ஒரு கேடுகெட்ட படத்தில் கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் நடித்து இருந்தார் நடிகை ஓவியா.

இந்த படம் கலாச்சார சீரழிவுக்குத்தான் பெண்களை அழைத்துச் செல்லும் என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன். பெரும்பாலும் அனைத்து படங்களையும் ஆதரித்து பேசும் இவர் முதன்முறையாக ஒரு படத்தை, அதில் சொல்லப்பட்டுள்ள கருத்தை எதிர்த்து பேசியிருப்பது உண்மையிலேயே கவனத்திற்கு உரியதாக மாறியுள்ளது.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இப்படி படம் எடுப்பதால் பெண்கள் கலாச்சாரம் ஒன்றும் கெட்டுவிடாது என வாய் கிழியபேசி வரும் அனிதா உதீப் இந்த படத்தை அழகிய அசுரா என்கிற புனைபெயரில் மறைந்து கொண்டு படமாக இயக்கியுள்ளார்.. ஏன் இப்படி செய்துள்ளீர்கள் என கேட்டதற்கு என்னுடைய நிஜப்பெயரில் இந்த படத்தை இயக்கினால் என் உறவு வட்டங்களில் என்னைப்பற்றி ஒரு தவறான பார்வை விழுந்து விடும் என்பதால், நான் சொல்லவந்த விஷயங்களை இன்னொரு பெயரில் இயக்கி உள்ளேன் என கூறியுள்ளார்.

இவர் சொல்ல வந்தது நல்ல விஷயம் என்றால் தாராளமாக இவர் தனது சொந்த பெயரிலேயே இயக்கியிருக்கலாமே..? அதற்கு பதிலாக வேறு ஒரு பெயரில் ஒளிந்துகொண்டு இவர் படத்தை இயக்கியுள்ளதே, இது எவ்வளவு மோசமான படம் என்பதை சொல்லாமல் சொல்லி விடுகிறது