ரஜினிக்கு டார்ச்சர் கொடுத்த தன்ஷிகா..!


சூப்பர்ஸ்டார் நடிக்க பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘கபாலி’ படத்தில் எதிர்பாராதவிதமாக பலருக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. வாழ்க்கையும் கிடைத்திருக்கிறது.. அதில் நடிகை தன்ஷிகாவும் ஒருவர்.. இந்தப்படத்தில் ரஜினிக்கு மகளாக இவர் நடிக்கிறார் என்று சொன்னார்கள்.. ஆனால் அதில் உண்மை இல்லையாம். அந்த கேரக்டரில் ஒரு சஸ்பென்சும் இருக்கிறதாம்..

தாதாவான ரஜினியின் எதிர் குரூப்பை சேர்ந்தவர்தானாம் தன்ஷிகா… படத்தின் கதைபடி ரஜினிக்கு தேவையில்லாமல் டார்ச்சர் கொடுக்கும் வேலையாம் இவருக்கு.. இந்த கேரக்டருக்காக வெளிநாட்டில் வசிக்கும் பெண் போல, குறிப்பாக கேங்ஸ்டர் பொண்ணு போல ஆளே மாறியிருக்கிறாராம் தன்ஷிகா.